புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் | பூ. தனிக்ஷா பாரதி | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம் : புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்
ஆசிரியர் : பூ. தனிக் ஷா பாரதி
பக்கங்கள் : 88
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

இயற்கை, அன்றாடம், சமூகம், தத்துவம், கற்பனை, நாம் காணத் தவறும் சில செயல்கள், எண்ணங்கள் எனப் பலவற்றை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கவிஞர் மூன்றே வரிகளில் வடித்திருக்கிறார் அழகான ஹைக்கூக்களாய்.

குழந்தை மனதுக்கே உரித்தான கற்பனைகள் புத்தகம் முழுமையும் இருக்கின்றன. அவரது வயதையும் தாண்டி சில இடங்களில் யோசித்திருக்கிறார்.

நூலிழையில் வருடத் தவறிய
கூர்முனைக் கத்தி
வாழ்வை உணர்த்தும்

வியப்பான ஒரு செய்தியைப் படிக்கும் போது நமது முகம் மாறும் அல்லவா? அதே அனுபவத்தைத் தந்தது இந்தக் கவிதை.

ஒவ்வொரு வார்த்தைகளின்
‘A’ க்களிலும் கட்டப்படும்
ஈபிள் டவர்கள்

இது அருமையான கற்பனை.

கசக்கி வீசிய கதை
விரித்து ரசிக்கிறது
காற்று

Self doubt -க்கு அழகான ஒரு remedy தருகிறார் இந்தக் குட்டிக் கவிஞர்.

காலத்தின் மாற்றம்
வெறும் அசைவாகிறது
கடிகாரத்திற்கு.

இது தத்துவம் அல்லாமல் வேறில்லை.

இந்தச் சிறு அறிமுகமே இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். கவிஞர் தொடர்ந்து எழுத்துலகில் பயணிக்க எனது வாழ்த்துக்கள். கட்டாயத்திற்கு உட்படுத்தாமல் தனது குழந்தைகளின் திறமைகளை வளர்த்தெடுக்கும் பெற்றோர்கள் உள்ளனர். தனிக் ஷாவைப் படிக்கவும் எழுதவும் தொடர்ந்து ஊக்குவிக்கும் அவரது தந்தை இரா.பூபாலன் அவர்களுக்கு எனது நன்றி.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started