Category: அனுபவம்

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep9

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep9

    இத்தொடரில் இது கடைசிப் பதிவு. (முந்தைய பதிவுகளின் சிறு தொகுப்பாய்) 1) நீங்கள் முதல் முறை புத்தகம் வெளியிடப் போகிறீர்கள் என்றாலும் உங்களை மரியாதையுடன் நடத்தும் பதிப்பகங்களைத் தேர்ந்தெடுங்கள்.2) பதிப்பகத்திற்குப் புத்தகத்தை அனுப்பி வைத்துவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். பல்வேறு காரணங்களால் மறுமொழி ஏதும் சொல்லாத பதிப்பகங்கள் நிறைய உள்ளன. உங்கள் நேரத்தை வீணடிக்காத பதிப்பகங்களைத் தேர்ந்தெடுங்கள்.3) இது 21ஆம் நூற்றாண்டு. எனவே இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கும் பதிப்பகங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.4) புத்தகத்தை…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep8

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep8

    ஏழு மாதங்களாக பதிப்பகங்களின் பின்பு ஓடியதில் ஒரே ஒரு பதிப்பகத்தில் இருந்து மட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கடைசியில். அந்தப் பதிப்பகத்திற்குப் புத்தகம் அனுப்பி இருந்தேன். அவரே சில நாட்கள் கழித்து அலைபேசியில் தொடர்பு கொண்டார். சில நிராகரிப்புகளுக்கு உள்ளாகி இருந்ததால் ‘சார், புத்தகம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா? இந்தப் புத்தகத்தை உங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவீங்களா’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நாங்களே இங்க உக்காந்து நல்லா இருக்கு நல்லா இல்லன்னு முடிவு பண்ணிட்டு இருந்தா எப்படி…மக்கள்…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep7

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep7

    சில உணர்வுகளை ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது போல. திரைப்படங்களில் எல்லாம் காட்டுவார்கள் அல்லவா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்பதாக. அதேபோல நானும் சில வினாடிகள் அதிர்ந்து போய் ஆடாமல் அசையாமல் நின்றிருக்கிறேன் இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகளோடு. (வருத்தத்தால் அல்ல அதிர்ச்சியினால்)என்னுடைய ஆல்மோஸ்ட் த்ரீ டிகேட்ஸ் வாழ்க்கையில் இப்படியானதொரு உணர்வினை முதல் முறை வாய்க்கப் பெற்றேன். ஒரு பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். எனது பெயரையும் நான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதையும் சொல்லிவிட்டு ‘நான்…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep6

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep6

    ஒரு பதிப்பகத்திற்கு மின்னஞ்சலில் புத்தகம் அனுப்பி வைத்திருந்தேன். ஓரிரண்டு வாரங்கள் கழித்துத் தொலைபேசியில் பேசினார். இரண்டு மூன்று கவிதைகளைச் சுட்டிக்காட்டி அது நன்றாக இருந்ததாகவும், இன்னும் பல இடங்களில் கவிதைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கூறினார். ‘மேம் எந்தெந்த இடங்களில் என்று சொல்லுங்கள். நான் திரும்ப முயற்சி செய்து பார்க்கிறேன்’ என்றேன். ஆனால் அவரோ இருவரும் ஒன்றாக இணைந்து திருத்துவோம் என்றார். (கவிதைகளை சில இடங்களில் மாற்றி எழுதப் போகிறார் என்ற அர்த்தத்தில் அப்படிச் சொன்னார்) ஆனால்…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep5

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep5

    அன்று ஒரு பதிப்பகத்தாரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் தன்மையாகப் பதிலளித்தார். ஆனால் அவர்கள் கவிதைப் புத்தகங்களைப் பிரசுரிக்கும் பதிப்பகம் கிடையாது. அழைப்பைத் துண்டிக்கும் போது சார் ஒரு சந்தேகம் – சில பதிப்பகங்கள் புத்தகம் வெளியிட பணம் கேட்கிறார்கள் – அப்படி நடப்பதுண்டா என்று கேட்டேன். எவ்வளவு கேட்கிறார்கள் என்றார். நானும் பதில் சொன்னேன். இந்தத் தொகை எல்லாம் அதிகம் என்றும் print on demand என்ற வசதி உள்ளது பற்றியும் கூறினார். புத்தகங்களை வெளியிட பணம்…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep4 | சங்கமித்ரா

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep4 | சங்கமித்ரா

    போன பதிவில் சொல்லி இருந்தேன் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லா பதிப்பகங்களையும் தொடர்புகொண்டு பேசும்படி. அதில் ஒரு சிக்கலை எதிர்கொண்டேன். ஒரு பாடமும் கற்றுக்கொண்டேன். 1) ‘ஒரு புத்தகம் எழுதி இருக்கேன். அத அச்சு புத்தகமா வெளியிடணும். அதனால தான் உங்களுக்கு கூப்பிட்டு இருக்கேன் மேம்’‘இது உங்க முதல் புத்தகமா?’ (இன்சர்ட் சிவாஜி டெம்ப்ளேட் – உங்க ப்ராஜெக்ட் ஓட வேல்யூ எவ்ளோ – சேம் பீலிங்)‘ஆமாங்க’‘இதுக்கு முன்னாடி வேற பதிப்பகத்துல பேசினீங்களா’ (குறிப்பு: பெரு நிறுவனங்களில்…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep3 | சங்கமித்ரா

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep3 | சங்கமித்ரா

    📚இணைய வெளியிலும், இளம் வாசகர்கள் மத்தியிலும் பிரபலமான பதிப்பகம் அது. அவர்களது செயல்பாடும் சிறப்பாக இருந்தது. இக்காரணங்களே அப்பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளச் செய்தது. அலைபேசியில் அப்பதிப்பகத்தவரிடம் பேசும்போதே அவ்வளவு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. புத்தகமும் அனுப்பி வைத்துவிட்டேன். ஒன்று இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை இவர்கள் நிச்சயம் வெளியிடுவார்கள் என்ற அதீத நம்பிக்கை. இரண்டாவது என் புத்தகத்தின் மேல் வைத்திருந்த ஓரளவு நம்பிக்கை. இந்த இரண்டு காரணங்களுமே என்னைக் காத்திருக்க வைத்தது. 📚ஒன்று இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep2 | சங்கமித்ரா

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep2 | சங்கமித்ரா

    📚பதிப்பகங்களின் பட்டியல் தயாராய் இருந்தது. அலைபேசியின் மூலம் ஒவ்வொரு பதிப்பகமாய் தொடர்பு கொண்டேன். நிறைய பேர் அழைப்பை ஏற்கவில்லை. சிலர் காரணங்களோடு முடியாது என சொல்லிவிட்டார்கள் (அதிகமாய் எதிர்பார்க்காததால் வருத்தப்படவில்லை). சிலர் ஈமெயில் ஐடி அனுப்பி புத்தகத்தினை பிடிஎஃப் ஆக அனுப்பச் சொன்னார்கள். Good vibes ஆக தோன்றாத போது நானும் சிலருக்கு புத்தகம் அனுப்பவில்லை. என்ன ஆச்சு நீங்க இன்னும் புத்தகம் அனுப்பவே இல்லையே என்று பதிப்பகத்தின் பக்கமிருந்தும் ஒரு follow-up-call வரவில்லை. வரவும் வராது.…

  • பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep1 | சங்கமித்ரா

    பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep1 | சங்கமித்ரா

    நிறைய மனப் போராட்டங்களுக்குப் பிறகு புத்தகத்தின் இறுதி வரைவை தயாரித்து வைத்திருந்தேன். இனி பதிப்பகங்களை அணுகுவதுதான் ஒரே வேலை என நினைத்திருந்தேன். 2021 ஜனவரி ஆரம்பித்து ஜூலை வரை பதிப்பகங்களே கதி என கிடந்த ஏழு மாதங்கள். நிறைய பதிப்பகங்களின் பெயரை அவற்றின் தொடர்பு எண்ணோடு குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்தேன். சுய வெளியீடு என்பதை எல்லாவற்றிற்கும் கீழாக கடைசி வரியில் எழுதி வைத்திருந்தேன். அதுவும் ஒரு பெரிய கேள்விக் குறியோடு. பதிப்பகங்கள் குறித்து எனக்கு எவ்வித முன்னறிவும்…

Design a site like this with WordPress.com
Get started