Tag: மனநலம்

  • சொல் – காட்சி

    ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதில் எனக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. அதில் ஒன்று, அந்த நொடியில் நடக்க வேண்டிய வேலையைச் செய்யாமல் பத்து மணி நேரத்திற்குப் பிறகு /பத்து நாட்களுக்குப் பிறகு /பத்து வருடங்களுக்குப் பிறகு (I’m not even exaggerating) செய்யப் போகும் வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் திட்டமிட்ட எந்த வேலையும் அந்த நாளின் முடிவில் நடந்திருக்காது. செயல் என்பது நிகழ்காலத்தில் மட்டும்தானே நடக்கும். இப்படியான மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.…

  • உடலும் மனமும் – II

    நல்லதொரு மனநிலையில் இல்லாத போது அன்றாட வேலைகளைச் செய்வது அவ்வளவு சிரமமாய் இருந்தது. படுக்கையில் இருந்து எழுந்து குளித்து உண்பது என்பதே சுமை என்றான பின்பு தினசரி வேலைகளைச் செய்வதும் வேலை/படிப்பு சம்பந்தமாக இயங்குவதும் நரகம் போலத் தோன்றியது. நிகழ்காலத்தில் இல்லாத மனநிலையோடு நான் ஒரு பாதையிலும் காலம் வேறு ஒரு பாதையிலும் பயணிப்பதைப் போல இருந்தது. வெறும் பத்து நிமிடம் எடுத்துக் கொள்ளக்கூடிய சாதாரண வேலையாகத் தான் இருக்கும். உடல்நிலை ஒத்துழைத்தால் கூட அதனை செய்வதற்கான…

  • உடலும் மனமும் – I

    மலையேற்றங்களில் ஈடுபடும் ஒருவரின் காணொளி ஒன்றை வெகு நாட்களுக்கு முன்பு பார்க்க நேர்ந்தது. அதில் மன உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிப் பேசி இருப்பார். உடல் சோர்ந்து விட்டது. ஒரு அடி கூட எடுத்து வைக்க சக்தி இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இருந்தாலும் அந்த உடலை, மனத்தால் இயக்க முடியும். இன்னும் ஒரே ஒரு அடி- இன்னும் ஒரே ஒரு அடி என்று நினைத்துக் கொண்டே நடந்தால் உயரத்தை, சிகரத்தை, நாம் நினைத்த இலக்கை…

  • காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் | புத்தகம் – விமர்சனம்

    காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காதுகள்ஆசிரியர் : எம்.வி. வெங்கட்ராம்பக்கங்கள் : 160பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் மகாலிங்கம் – முதன்மைக் கதாபாத்திரம் – தனது 30-களின் மத்தியில் உள்ளிருந்தும் புறமிருந்தும் கற்பனையான ஓசைகளை, குரல்களைக் கேட்கிறான். புத்தகத்தின் முதல் சில பக்கங்கள் அவனது குழந்தைப் பருவம், கல்வி, திருமணம், குடும்பம் போன்றவற்றைச் சொல்லிவிடுகிறது. பிறகு முழுக்க முழுக்க அவனது காதுகளே அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதைச் சொல்லிச் செல்லுகிறது. ஆசிரியர் தனது அனுபவத்தினையே புதினமாக எழுதியுள்ளதால் இப்புத்தகத்தைத் தனது…

  • கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : கிழவனும் கடலும்ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வேமொழிபெயர்ப்பாளர் : எம். எஸ் (எம். சிவசுப்ரமணியன்)பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 104 இயற்கைக்கும் மனிதனுக்கும் ஆன போராட்டமாகவோ, கடல் சார்ந்த கதையாகவோ இப்புதினத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் மனப்போராட்டங்களை மட்டுமே இக்கதையில் என்னால் காண முடிந்தது. ‘எதையும் யோசிக்காதே’ என்று தொடங்கும் ஒரு பத்தி. அடுத்த பத்தி ‘நான் சிந்திக்க வேண்டும்’ எனத் தொடங்கும். அடுத்த பக்கத்தில் ‘நிறைய யோசிக்கிறாய்’ என…

  • வார்டு எண் 6 | ஆன்டன் செக்காவ் | புத்தகம் – விமர்சனம்

    வார்டு எண் 6 | ஆன்டன் செக்காவ் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : வார்டு எண் 6 ஆசிரியர் : ஆன்டன் செக்காவ்மொழிபெயர்ப்பு : வானதிபக்கம் : 275 💭கறுப்புத் துறவி, மாடி வீடு, குடியானவர்கள், வார்டு எண் 6 என்ற நான்கு குறுநாவல்களின் தொகுப்பே இந்நூல். 💭தன்னை மேதை எனவும் வித்தியாசமானவன் எனவும் நினைக்கும் கோவரின். அறிவின் மூலமும் சிந்தனையின் மூலமும் மேன்மை நிலையை அடைய முயற்சிப்பவர். குடும்ப வாழ்க்கை அப்படிப்பட்ட ஒரு மனிதரை சாதாரண பாதையில் நடக்க கூட்டி வந்தால் நடக்கும் விபரீதங்கள் பற்றி இக்கதை…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    💫கூட்டம் என்றாலே கொஞ்சம் பயமும் பதட்டமும் கூடவே வந்துவிடும். அதுவும் அங்கே எல்லோர் முன்னிலையிலும் 10 நிமிடங்கள் பேசியாக வேண்டும் என்றால் இதை விட பெரிய சங்கடமான தருணம் ஒரு Introvert-க்கு அமைய முடியாது. ஆனால் இவ்வளவு மனத்தடைகளையும் மீறி அங்கு சென்றதில் நிறைய பேருடைய அறிமுகம் கிடைத்தது….நட்பு கிடைத்தது… பாராட்டுக்கள் கிடைத்தன…. மகிழ்வான மறக்கமுடியாத தருணம் கிடைத்தது. 💫எதனால், எப்படி கவிதை எழுத ஆரம்பித்தேன், இளம் எழுத்தாளர்களுக்கு/படைப்பாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன – என்பதைப் பற்றி…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    Hi everyone👋 Today I have accomplished a small milestone in my book sales. My 50th book is on the way to the destination. I am not a person who usually celebrate small wins. I only see mistakes to regret late at night. Lately, I’ve started to see that from a different perspective. It’s not only…

  • சித்திரங்களின் விசித்திரங்கள் | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    சித்திரங்களின் விசித்திரங்கள் | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    நூல் : சித்திரங்களின் விசித்திரங்கள்ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்பக்கம் : 104வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் 🎨கலைகள் பணக்காரர்களுக்கானது. அடுத்தவேளை உணவு எப்படி கிடைக்கும் என யோசிக்கத் தேவையில்லாத மனிதர்களுக்கானது என ஒரு பதிவில் கண்டேன். இதில் எனக்கு துளிகூட உடன்பாடில்லை. 🎨பெரும்பான்மையான கலைஞர்களின் (குறைந்தபட்சம் ஆரம்பகாலங்களில்) வாழ்வு வறுமையால் நிறைந்ததுதான். இன்று கோடிக்கணக்கில் விற்பனையாகும் அவர்களது படைப்புகள் பெரும்பாலும் அவர்களது வாழ்நாளில் திரும்பிப்பார்க்கப்படாதவை. 🎨கலைகள் எல்லோருக்குமானது. பொதுவானது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் மன அழுத்தத்தில்…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்

    💭கனவின் துடுப்பு என்ற எனது முதல் புத்தகத்திலிருந்து சில கவிதைகள்🤩 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

Design a site like this with WordPress.com
Get started