Tag: காலச்சுவடு

  • தோட்டியின் மகன் | தகழி சிவசங்கரப்பிள்ளை | புத்தகம் – விமர்சனம்

    தோட்டியின் மகன் | தகழி சிவசங்கரப்பிள்ளை | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : தோட்டியின் மகன்ஆசிரியர் : தகழி சிவசங்கரப்பிள்ளைமொழிபெயர்ப்பு : சுந்தர ராமசாமிபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 176 தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகளில் முன்னைவிட வளர்ச்சி கண்டிருக்கிறோம். ஆனால் இப்போதும் மனிதனின் கழிவுகளை மனிதனே அள்ளுவது தொடர்கிறது. ஆலப்புழையில் வசிக்கும் தோட்டிகளின் வாழ்வு குறித்து இப்புத்தகம் பேசுகிறது. இக்கதையில் இசக்கிமுத்து – சுடலைமுத்து – மோகன் கதாபாத்திரங்களாய் வருகிறார்கள் தாத்தா அப்பா மகன் என. பரம்பரை பரம்பரையாக ஒரே சமூகம் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது.…

  • காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் | புத்தகம் – விமர்சனம்

    காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காதுகள்ஆசிரியர் : எம்.வி. வெங்கட்ராம்பக்கங்கள் : 160பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் மகாலிங்கம் – முதன்மைக் கதாபாத்திரம் – தனது 30-களின் மத்தியில் உள்ளிருந்தும் புறமிருந்தும் கற்பனையான ஓசைகளை, குரல்களைக் கேட்கிறான். புத்தகத்தின் முதல் சில பக்கங்கள் அவனது குழந்தைப் பருவம், கல்வி, திருமணம், குடும்பம் போன்றவற்றைச் சொல்லிவிடுகிறது. பிறகு முழுக்க முழுக்க அவனது காதுகளே அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதைச் சொல்லிச் செல்லுகிறது. ஆசிரியர் தனது அனுபவத்தினையே புதினமாக எழுதியுள்ளதால் இப்புத்தகத்தைத் தனது…

  • காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காச்சர் கோச்சர் ஆசிரியர் : விவேக் ஷான்பாக்மொழிபெயர்ப்பு : கே. நல்லதம்பிபக்கங்கள் : 103 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஏன் இந்தப் புத்தகம் வாசிக்க வேண்டும்? 1) வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய வாழ்க்கை முறையில் சற்று நின்று கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தல் என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. ஆனால் இப்புத்தகம் உங்களைக் கடந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும். நல்லதோ கெட்டதோ இப்புத்தகத்தில் இல்லாத சில அனுபவங்களையும் சேர்த்து அசை போட வைக்கும்.2)…

  • அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்

    அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : அறியப்படாத தமிழகம்ஆசிரியர் : தொ. பரமசிவன்பக்கங்கள் : 131வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 💥தமிழர்களின் உணவு முறை, அதன் வரலாறு, நமது வாழ்வு முறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், பொழுதுபோக்க நாம் விளையாடும் விளையாட்டுக்கள், பௌத்த மதம், சமண மதம் மற்றும் சித்தர்கள் குறித்த தகவல்கள், சமயங்களுக்கு இடையே நடந்த தத்துவச் சண்டைகள், கறுப்பு நிறம் குறித்து நமது இலக்கியங்களில் காணப்பெறும் தகவல்கள் எனஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 💥தமிழர்களின் உணவு முறை, அதில்…

  • தெய்வம் என்பதோர் | தொ. பரமசிவன் | புத்தக விமர்சனம்

    தெய்வம் என்பதோர் | தொ. பரமசிவன் | புத்தக விமர்சனம்

    நூல் : தெய்வம் என்பதோர்ஆசிரியர் : தொ. பரமசிவன்பக்கம் : 112வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் இது நான் படித்த தொ.ப அவர்களது முதல் புத்தகம். இம்முறை மீள்வாசிப்பு. நான் படித்த முதல் ஆய்வு சார்ந்த நூலும் இதுவே. தொ.ப -வின் புத்தகங்கள் மூலம் கடவுளை, மதத்தை, சாதியை, அதிகாரம் மற்றும் ஆதிக்கம் என்ற தளத்தில் மட்டும் அல்லாமல் பண்பாட்டு அளவில் நடந்த சமூக நிகழ்வுகளை/சிக்கல்களை இதுவரை அறிந்திராத இன்னொரு கோணத்தில் நின்று புரிந்து கொள்ள முடியும்.…

  • மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம்

    மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம்

    நூல் : மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் ஆசிரியர் : சுந்தர ராமசாமி பக்கம் : 176 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் மன அழுத்தத்தில் உள்ளவர்களும்,  எப்போதும் அதிகப்படியாய் யோசித்தபடியே இருப்பவர்களும் சுந்தர ராமசாமி அவர்களின் புத்தகங்களை எளிதாய் உணர்ந்து விட முடியும். அவரது புத்தகங்களை அஃறிணை நண்பனாய் மாற்றிக்கொள்ள முடியும். சின்ன சின்ன உணர்வுகளைக் கூட அவரால்  எழுத்தில் வார்த்து விட முடிகிறது. எளிதில் பகிர்ந்து கொள்ளாத அல்லது மற்றவர்களிடமிருந்து மறைக்க நினைக்கும் உணர்வுகள் அதில்…

  • தோன்றாத் துணை | பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    தோன்றாத் துணை |  பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    நூல் : தோன்றாத் துணை ஆசிரியர் : பெருமாள் முருகன்  பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பக்கம் : 176 ஆசிரியர் பெருமாள் முருகன் அவருடைய தாயாரை நினைவுகூர்ந்து எழுதியுள்ள 22 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கிராமம் – விவசாயம் – குடும்பம் என வாழும் ஒரு துணிச்சலான பெண்ணின்(அம்மாவின்) வாழ்க்கையை வரைந்துள்ளது இப்புத்தகம். அவரது மறைவைப்  பற்றியும் பகிர்ந்துள்ள இந்நூல் அவரது ஆளுமையை, வாழ்க்கையைப் பல ஆயிரம் வாசகர்களிடம் கொண்டு செல்லவும் தவறவில்லை.

  • மாதொருபாகன் | பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    மாதொருபாகன் | பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    நூல் : மாதொருபாகன் ஆசிரியர் : பெருமாள் முருகன் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பக்கம் : 190 கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகளை இச்சமூகம் எப்படிக் கேள்விக்குள்ளாக்குகிறது, அந்தக் கணவன் மனைவியின் நிலை என்ன, அவர்கள் எப்படி யோசிக்கிறார்கள், எப்படி இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பன போன்ற உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது இப்புதினம். சலிப்பை ஏற்படுத்தாத நடை பக்கங்களை வேகமாக நகர்த்த உதவியது. இவருடைய அனைத்துப் புத்தகங்களையும் வாசிக்கும் ஆவலை ஏற்படுத்த…

  • ஜே.ஜே : சில குறிப்புகள் | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம்

    ஜே.ஜே : சில குறிப்புகள் | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம்

    நூல் : ஜே. ஜே : சில குறிப்புகள் ஆசிரியர் : சுந்தர ராமசாமி பக்கம் : 183 வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்  பாரதியைப் போல தன் 39 ஆவது வயதில் மறைந்த ஜோசப் ஜேம்ஸ் என்னும் கற்பனையான மலையாள கலைஞனை, எழுத்தாளனை, விமர்சகனை, ஒரு தத்துவ ஞானியை தமிழுக்கு அறிமுகம் செய்வதே இப்புத்தகத்தின்  கதைக்களம். முதலில் இந்தப் புத்தகத்தைப் படிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் எதேச்சையாக  புரட்டியபோது படித்த இரண்டு பக்கங்கள் முழு புத்தகத்தையும்…

Design a site like this with WordPress.com
Get started