Tag: கட்டுரை

  • The human brain can not comprehend the negative

    @Advice 101 ‘திரும்பிப் பாக்காத’ என்று யாராவது சொன்னால் கழுத்து எலும்பு முறியும் அளவிற்கு சட்டென திரும்பிப் பார்ப்போம். ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்போம். இடையில் கொஞ்சம் கவனம் சிதறினால், திரும்பவும் பழைய நிலைமைக்குப் போக ‘Distract ஆகக் கூடாது’ என நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம். ஆனால் அப்போதுதான் எதை எல்லாம் நமது மூளை  distraction என்று நினைக்கிறதோ அதை எல்லாம் நினைவிற்கு கொண்டு வந்து தரும். என்ன பண்றது…டிசைன் அப்படி. ஆனால், இப்பிரச்சனைக்குத் தீர்வாக,…

  • உடலும் மனமும் – I

    மலையேற்றங்களில் ஈடுபடும் ஒருவரின் காணொளி ஒன்றை வெகு நாட்களுக்கு முன்பு பார்க்க நேர்ந்தது. அதில் மன உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிப் பேசி இருப்பார். உடல் சோர்ந்து விட்டது. ஒரு அடி கூட எடுத்து வைக்க சக்தி இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இருந்தாலும் அந்த உடலை, மனத்தால் இயக்க முடியும். இன்னும் ஒரே ஒரு அடி- இன்னும் ஒரே ஒரு அடி என்று நினைத்துக் கொண்டே நடந்தால் உயரத்தை, சிகரத்தை, நாம் நினைத்த இலக்கை…

  • என் பின்னால் வா – மாவோ | மருதன் | புத்தகம் – விமர்சனம்

    என் பின்னால் வா – மாவோ | மருதன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : என் பின்னால் வா – மாவோஆசிரியர் : மருதன்பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்பக்கம் : 216வாசிப்பு : Kindle ஒரு கருத்தியலை நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமும் கொண்டு செல்வது என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. அதுவும் அம்மக்கள் அடிமை முறைக்குப் பழக்கப்பட்டு அறியாமையில் மூழ்கி இருக்கையில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் மாவோ பெருமளவில் அதை சாத்தியப்படுத்திருக்கிறார். புரட்சி செய்வது, போராட்டம் நடத்துவது, கூட்டம் கூட்டி பேசுவது,…

  • You can do it!!!

    You can do it!!!

    🎾ஒரு துறையில் ஆர்வம் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. முதல் வெற்றியோ, தொடர் வெற்றிகளோ, வருமானமோ, வாழ்க்கை முறையோ, ஈர்ப்போ, பதவியோ, உயர் நோக்கமுமோ எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.அதென்ன ஈர்ப்பு?அதுதான் ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபரைப் பார்த்து அத்துறையில் ஆர்வம் கொள்வது. உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர் போலவோ ஜாக்கிஜான் போலவோ ஸ்ரேயா கோஷல் போலவோ ஆக வேண்டும் என பேராவல் கொள்வது. (சூரியவம்சம் படம் பார்த்து கலெக்டராக ஆசைப்படுதல், கில்லி படத்தைப் பார்த்து கபடி விளையாட…

  • அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்

    அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : அறியப்படாத தமிழகம்ஆசிரியர் : தொ. பரமசிவன்பக்கங்கள் : 131வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 💥தமிழர்களின் உணவு முறை, அதன் வரலாறு, நமது வாழ்வு முறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், பொழுதுபோக்க நாம் விளையாடும் விளையாட்டுக்கள், பௌத்த மதம், சமண மதம் மற்றும் சித்தர்கள் குறித்த தகவல்கள், சமயங்களுக்கு இடையே நடந்த தத்துவச் சண்டைகள், கறுப்பு நிறம் குறித்து நமது இலக்கியங்களில் காணப்பெறும் தகவல்கள் எனஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 💥தமிழர்களின் உணவு முறை, அதில்…

  • கார்ப்பரேட் என்.ஜி.ஓ – க்களும் புலிகள் காப்பகங்களும். என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் | இரா.முருகவேள் | புத்தக விமர்சனம்

    கார்ப்பரேட் என்.ஜி.ஓ – க்களும் புலிகள் காப்பகங்களும். என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் | இரா.முருகவேள் | புத்தக விமர்சனம்

    நூல் : கார்ப்பரேட் என்.ஜி.ஓ – க்களும் புலிகள் காப்பகங்களும். என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்ஆசிரியர் (கட்டுரைகளின் தொகுப்பு): இரா.முருகவேள்பக்கங்கள் : 88வாசிப்பு : Kindle 🐅உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. மலைகளையும், காடுகளையும் சுற்றிப் பார்ப்பது என் விருப்பப் பட்டியலில் (இன்னமும்) உள்ளது. மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் சுற்றுலா சார்ந்த(eco-tourism) புகைப்படங்களையும், காணொளிகளையும் அதே ஆச்சரியம் ததும்பும் கண்களோடு இப்போது பார்க்க முடியவில்லை. இங்கு பழங்குடியினர் இருந்திருப்பார்களா- ஆம்…

  • எமோஷனல் இன்டலிஜன்ஸ் – இட்லியாக இருங்கள்! | சோம. வள்ளியப்பன் | புத்தக விமர்சனம்

    எமோஷனல் இன்டலிஜன்ஸ் – இட்லியாக இருங்கள்! | சோம. வள்ளியப்பன் | புத்தக விமர்சனம்

    நூல் : எமோஷனல் இன்டலிஜன்ஸ் – இட்லியாக இருங்கள்! ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்வெளியீடு : கிழக்கு பதிப்பகம்பக்கங்கள் : 115 வாசிப்பு : Kindle & Audible 🧠பாபி அன்றைக்குத் தோழியின் வீட்டிற்குச் செல்வதற்காகத் தந்தையிடம் அனுமதி பெற்றுக் கிளம்புகிறாள். அவளது தந்தையும் வேறு வேலையாக வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே கிளம்பிவிடுகிறார். எதிர்பாராதவிதமாக பாபியின் தோழியின் வீடு பூட்டியிருக்கிறது. அதனால் பாபியும் திரும்ப வீட்டிற்கு வந்துவிடுகிறாள். வந்தவள் குறும்புத்தனமாக முன் கதவைத் திறக்காமல் பின்வாசல் வழியாக…

  • தக்கர் கொள்ளையர்கள் | இரா. வரதராசன் | புத்தக விமர்சனம்

    தக்கர் கொள்ளையர்கள் | இரா. வரதராசன் | புத்தக விமர்சனம்

    நூல் : தக்கர் கொள்ளையர்கள்ஆசிரியர் : இரா. வரதராசன் பக்கங்கள் : 315வாசிப்பு : Kindleவெளியீடு : கிழக்கு பதிப்பகம் ஒரு பயணம் மேற்கொள்ளும் போது நமது கவனம் பெரும்பாலும் எங்கு இருக்கும்? வேடிக்கை பார்ப்பதில்… சிரித்தபடியே கூட நடந்து வரும் இன்னொரு பயணி எதிர்பார்க்காத நேரத்தில் சுருக்குக் கயிறைக் கழுத்தை நோக்கி வீசி எறிந்தால்? உடலை இரண்டாக ஒடித்துத் தோண்டியிருக்கும் குழியில் போட்டுவிட்டு எந்தத் தடயமும் இல்லாமல் செய்துவிட்டால்?? கேட்பதற்கே எவ்வளவு பயங்கரமாக உள்ளது…கிட்டத்தட்ட எட்டு…

  • பூப்பு (மாதவிடாய் – சந்தேகங்களும் விளக்கங்களும்) | ரேணுகாதேவி | புத்தக விமர்சனம்

    பூப்பு (மாதவிடாய் – சந்தேகங்களும் விளக்கங்களும்) | ரேணுகாதேவி | புத்தக விமர்சனம்

    நூல் : பூப்பு (மாதவிடாய் – சந்தேகங்களும் விளக்கங்களும்)ஆசிரியர் : ரேணுகாதேவிபக்கங்கள் : 48வெளியீடு : வாலறிவன் பதிப்பகம் கருத்துக்கள் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்படும் இந்த நவீன உலகிலும் மாதவிடாய் ஒரு taboo topic ஆகவே உள்ளது. பெரும்பாலான பெண்கள் குழப்பத்துடனும் பயத்துடனும் தான் அவர்களது முதல் மாதவிடாயைக் கடந்து வந்திருப்பார்கள். இதுவரை வந்த sanitary napkins விளம்பரங்கள் பார்த்தாலே தெரிந்துவிடும் எத்தனை வலிகள்…எத்தனை சோகங்கள் என்று. பள்ளிப்பருவத்தில் மாதவிடாய் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல்…

  • மொசாட் | என். சொக்கன் | புத்தக விமர்சனம்

    மொசாட் | என். சொக்கன்    | புத்தக விமர்சனம்

    நூல் : மொசாட்ஆசிரியர் : என். சொக்கன்பக்கங்கள் : 233வாசிப்பு : Kindle 🔎மொசாட் – இஸ்ரேலிய உளவுத்துறைப் பற்றிய வரலாறு தான் இப்புத்தகம். இஸ்ரேலுக்கு வெளியிலிருந்து வரும் ஆபத்துகளைத் தடுப்பதுதான் மொசாட்டின் முக்கிய பணி. 🔎இவ்வுளவுத்துறை உருவான விதம், அதன் தலைவர்கள், வெற்றிகள், சொதப்பல்கள் என நிறைய தகவல்கள் உள்ளன. எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பும் பாய்ஸ் பட செந்தில் போல Information is wealth என்று சொல்லி நிறைய நிறைய தகவல்களைத் திரட்டுகிறார்கள்.…

Design a site like this with WordPress.com
Get started