Tag: புதினம்

  • ஓநாய் குலச்சின்னம் | ஜியோங் ரோங் | புத்தகம் – விமர்சனம்

    ஓநாய் குலச்சின்னம் | ஜியோங் ரோங் | புத்தகம் – விமர்சனம்

    நூல் : ஓநாய் குலச்சின்னம் ஆசிரியர் : ஜியோங் ரோங்மொழிபெயர்ப்பு : சி. மோகன் பக்கம் : 918 வாசிப்பு : Kindle 📍இயற்கையை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் எண்ணற்ற சிக்கலான முறையில் பிணைபட்டிருக்கும் இயற்கையின் கண்ணிகளில், ஒன்றை அறுத்து எறிந்தாலும் அது நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 📍உள் மங்கோலியாவில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் அங்குள்ள நாடோடி மக்களுடன் சேர்ந்து…

  • வார்டு எண் 6 | ஆன்டன் செக்காவ் | புத்தகம் – விமர்சனம்

    வார்டு எண் 6 | ஆன்டன் செக்காவ் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : வார்டு எண் 6 ஆசிரியர் : ஆன்டன் செக்காவ்மொழிபெயர்ப்பு : வானதிபக்கம் : 275 💭கறுப்புத் துறவி, மாடி வீடு, குடியானவர்கள், வார்டு எண் 6 என்ற நான்கு குறுநாவல்களின் தொகுப்பே இந்நூல். 💭தன்னை மேதை எனவும் வித்தியாசமானவன் எனவும் நினைக்கும் கோவரின். அறிவின் மூலமும் சிந்தனையின் மூலமும் மேன்மை நிலையை அடைய முயற்சிப்பவர். குடும்ப வாழ்க்கை அப்படிப்பட்ட ஒரு மனிதரை சாதாரண பாதையில் நடக்க கூட்டி வந்தால் நடக்கும் விபரீதங்கள் பற்றி இக்கதை…

  • பொய்த்தேவு | க.நா.சு | புத்தக விமர்சனம்

    பொய்த்தேவு | க.நா.சு | புத்தக விமர்சனம்

    நூல் : பொய்த்தேவுஆசிரியர் : க.நா.சுபக்கங்கள் : 276வாசிப்பு : Bynge ⏳சாத்தனூரில் உள்ள மேட்டுத்தெருவில் பிறந்தவன் சோமு. சிறுவயதிலேயே ரங்க ராவிடம் வேலைக்குச் சேர்கிறான். எப்படியோ கல்வியும் கிடைக்கிறது. பணத்தையே லட்சியமாகக் கொண்டு உழைக்க ஆரம்பிக்கிறான். வெற்றியும் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் பணத்தைப் பொய்த் தேவு(தெய்வமாக) ஆக நினைத்து அவற்றைத் துறக்கிறான். இறுதியில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து இறந்தும் போகிறான். இதுவே இப்புத்தகத்தின் மேலோட்டமான கதை. ⏳பெரும்பாலும் அதிகப்படியான விவரிப்புகள் என்னைக் கவர்வது இல்லை. ஆனால்…

  • வெண்ணிற இரவுகள் | ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி | புத்தக விமர்சனம்

    வெண்ணிற இரவுகள் | ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி | புத்தக விமர்சனம்

    நூல் : வெண்ணிற இரவுகள்ஆசிரியர் : ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கிபக்கங்கள் : 117மொழிபெயர்ப்பாளர் : ரா.கிருஷ்ணையாவாசிப்பு : Kindle ❤முக்கோணக் காதல். நான்கு இரவுகளில் கதை நடைபெறுவதாய் புத்தகம் அமைந்திருக்கும். உணர்வுகளை முதன்மைப்படுத்தி எழுதியுள்ள விதம் கதையோடு ஒன்றிப் போகச் செய்கிறது. ❤ஒன்றிரண்டு இடங்கள் தவிர்த்து மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது.கதாநாயகியின் வயது 16 என இருக்கும். அது மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. அதனை மட்டும் தவிர்த்துவிட்டு வாசிக்கையில் புத்தகம் அதன் போக்கில் நம்மை இழுத்துச் செல்லும். ❤அன்பு,…

  • புயலிலே ஒரு தோணி | ப. சிங்காரம் | புத்தக விமர்சனம்

    புயலிலே ஒரு தோணி | ப. சிங்காரம் | புத்தக விமர்சனம்

    நூல் : புயலிலே ஒரு தோணிஆசிரியர் : ப. சிங்காரம்பக்கங்கள் : 323வாசிப்பு : Bynge 🛶கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது இப்புத்தகத்தை வாசித்து முடிக்க. பாதி புத்தகம் வரை எதற்கு இப்புத்தகம் வாசிக்கிறேன்? என்ற உணர்வோடு விருப்பம் இல்லாமலேயே வாசித்தேன். கொஞ்சம் கடினமான நடை. 🛶இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் இக்கதை நடைபெறுவதாய் அமைந்துள்ளது. பெரும்பாலான அத்தியாயங்கள் இந்தோனேஷியாவை கதைக்களமாக கொண்டிருக்கும். ஆசிய வரைபடத்தை மேலோட்டமாக ஒரு முறை பார்த்துக் கொள்வது இப்புத்தகத்தை வாசிக்க உதவியாக…

  • வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு | சாவி | புத்தக விமர்சனம்

    வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு | சாவி | புத்தக விமர்சனம்

    நூல் : வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்குஆசிரியர் : சாவிபக்கங்கள் : 111வாசிப்பு : Bynge Ohayo gozaimasu…நகைச்சுவையான புத்தகம் வாசிக்க விருப்பப்பட்டு, வாஷிங்டனில் திருமணம் என்ற புத்தகத்தைப் படிக்கத்தான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஜப்பான் என்று இருந்ததால் இப்புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஜப்பானில் திருவள்ளுவருக்கு தேரோட்டம் நடைபெறுவதாக கதை இருக்கும். பொழுதுபோக்கிற்காக புத்தகம் படிக்க விரும்புபவர்களும், ஜப்பானை நேசிப்பவர்களும் இப்புத்தகத்தை வாசிக்கலாம்.Arigato gozaimasu…

  • அபிதா | லா.ச.ரா | புத்தக விமர்சனம்

    அபிதா | லா.ச.ரா | புத்தக விமர்சனம்

    நூல் : அபிதாஆசிரியர் : லா.ச.ராபக்கங்கள் : 112வாசிப்பு : Bynge லா.ச.ரா அவர்களின் வேறு புத்தகங்களைப் படிக்காமல் அபிதாவை ஏன் வாசித்தேன் என்ற உணர்வுதான் மேலோங்கி உள்ளது. கதாநாயகன் அம்பி வயதான காலத்தில் மனைவியுடன் தன் சொந்த ஊருக்கு வருகிறான். தன் பழைய காதலி இறந்து போன விஷயம் தெரிய வருகிறது. காதலியைப் போலவே தோற்றம் உள்ள அவள் மகள் மீது காதல் கொள்கிறான். அம்பியின் மனநிலை என்ன என்று கூறிக்கொண்டே கதை நகரும். இதென்ன…

  • பொய்மான் கரடு | கல்கி | புத்தக விமர்சனம்

    பொய்மான் கரடு | கல்கி | புத்தக விமர்சனம்

    நூல் : பொய்மான் கரடு ஆசிரியர் : கல்கி பக்கங்கள் : 128வாசிப்பு : Bynge ராஜா காலத்து கதையானாலும் சாதாரண மக்கள் பற்றிய கதையானாலும் ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தைக் கல்கியின் எழுத்துக்கள் மறக்காமல் ஏற்படுத்திவிடுகின்றன. 2 அல்லது 3 மணிநேரத்தில் வாசித்து விடக்கூடிய குறுநாவல். திரில்லர் வகையைச் சேர்ந்தது. இலகுவாக வாசிக்க விருப்பப்படும்போதோ அல்லது கடினமான புத்தக வாசிப்புக்கு இடையிலோ இப்புத்தகத்தைத் தாராளமாய் வாசிக்கலாம். எளிய நடை. Absolute page turner. கடைசி அத்தியாயத்தில்…

  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் | ஜெயகாந்தன் | புத்தக விமர்சனம்

    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் | ஜெயகாந்தன் | புத்தக விமர்சனம்

    நூல் : ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்ஆசிரியர் : ஜெயகாந்தன்பக்கம் : 423வெளியீடு : புத்தக டிஜிட்டல் மீடியா இது நான் படிக்கும் ஜெயகாந்தன் அவர்களின் இரண்டாவது புதினம். முதல் புதினம் – சில நேரங்களில் சில மனிதர்கள் – வாசித்து முடித்த பின்பு ஒரு வாரகாலம் அடுத்த புத்தகத்தை வாசிக்க இயலவில்லை. பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. (அதைப் பற்றி பிறகு நிச்சயம் பகிர்கிறேன்) மனித மனங்களை ஜெயகாந்தன் அவர்களால் எப்படிப் படம்பிடித்துக் காட்ட…

  • எங் கதெ | இமையம் | புத்தக விமர்சனம்

    எங் கதெ | இமையம் | புத்தக விமர்சனம்

    நூல் : எங் கதெ ஆசிரியர் : இமையம் பதிப்பகம் : க்ரியா பதிப்பகம் பக்கம் : 149 முதல் பக்கம் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை கதாநாயகனே கதையைச் சொல்லிச் செல்கிறான். உரையாடல்  வடிவம் போல கதை நகரவில்லை. எந்த வேலைக்கும் போகாத கதாநாயகன், கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழும் கதாநாயகி கமலா இவர்களுக்குள் நடக்கும் காதல், இரகசிய சந்திப்புகள், கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை இவையே கதைக்களம்.…

Design a site like this with WordPress.com
Get started