Tag: சிறுகதை

  • மொட்டைமாடிக் குருவி

    மொட்டைமாடிக் குருவி

    ‘‘வெள்ளைத் திணை தான் அது சாப்பிடுமாம், ‘உற்சாகத்தில் அண்ணா கொஞ்சம் சத்தமாய்ப் பேசினான். கூகுளில் தேடிக் கண்டுபிடித்துச் சொன்னான் இதுதான் சிட்டுக் குருவிகளின் பிரதான உணவு என. ‘எவ்வளவு வெல பாரு? ரொம்ப அதிகமா? எங்க கெடைக்கும்? நாளைக்கே வாங்கிட்டு வந்துரு – கட்டளையிட்டபடி நான். அவ்வப்போது கடைகளில் வாங்கி வரும் மிக்சரைக் கொடுத்து காகங்களின் வம்சத்தைக் கெடுத்ததைப் போல சிட்டுக்குருவிகளின் வம்சத்தையும் கெடுக்க விரும்பவில்லை. இதுவே இத்தேடலுக்குக் காரணம். பிரதான சாலையில் உள்ள பெரிய கடைகளிலோ,…

  • அப்பாவின் வேஷ்டி | பிரபஞ்சன் | புத்தகம் – விமர்சனம்

    அப்பாவின் வேஷ்டி | பிரபஞ்சன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : அப்பாவின் வேஷ்டிஆசிரியர் : பிரபஞ்சன்பக்கம் : 178வாசிப்பு : Kindleவெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 🤍ஆனா பாருங்க நமக்கு ரொம்பவும் பிடிச்ச உடைதான் சீக்கிரம் இற்றுப் போகும். நிறம் மங்கிப் போகும். எவ்வளவு துவைத்தாலும் போகாத கறை வந்து ஒட்டிக்கொள்ளும். எனது சிறுவயதில் ஒரு ஆடை இருந்தது. மாம்பழ நிறத்தில் பட்டுப் பாவாடை. சிவப்பு நிறத்தில் முழுக்கை சட்டை. முழுவதும் சரிகைகளால் நிறைந்திருக்கும். ஒரு கட்டத்தில் அது இற்றுப் போய்விட்டது. அப்பாவின் வேஷ்டி என்ற…

  • நாற்காலி | கி. ராஜநாராயணன் | புத்தகம் – விமர்சனம்

    நாற்காலி | கி. ராஜநாராயணன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : நாற்காலி (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் : கி. ராஜநாராயணன் பக்கங்கள் : 315வாசிப்பு : Kindle 💫கி.ரா அவர்களின் 40 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எளிமையான நடை. பெரும்பாலும் திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. படிக்கையில் நிச்சயம் நிறைய தடவை குறுநகை செய்யவேண்டியிருக்கும். நகைச்சுவைக்காக தனியாக மெனக்கெட்டு எழுதப்பட்ட வரிகள் போல் அல்லாமல் கதையோடு கதையாக வரும் வார்த்தைகள் புன்சிரிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலான கதைகள் கிராமத்தை மையமிட்டே உள்ளன. ஐந்தாறு கதைகள்…

  • ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள் | ஆன்டன் செக்காவ் | புத்தக விமர்சனம்

    ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள் | ஆன்டன் செக்காவ் | புத்தக விமர்சனம்

    நூல் : ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்ஆசிரியர் : ஆன்டன் செக்காவ் மொழிபெயர்ப்பாளர் : சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்பக்கம் : 146வெளியீடு : தடாகம்வாசிப்பு : Kindle 💫பொதுவாக புதினங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் போல சிறுகதைகள் எனக்குள் அவ்வளவு சீக்கிரம் நுழைந்து விடுவதில்லை. சில சிறுகதைகள் புரியாமலோ, பிடிக்காமலோ, பொருத்திப் பார்க்க முடியாமலோ போய் விடுகின்றன. சில சிறுகதைகள், சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த நபரைப் போன்றவை. அவற்றைப் பற்றி யோசிக்க எதுவுமே இருப்பதில்லை.…

  • ஒரு சிறு இசை | வண்ணதாசன் | புத்தக விமர்சனம்

    ஒரு சிறு இசை | வண்ணதாசன் | புத்தக விமர்சனம்

    நூல் : ஒரு சிறு இசைஆசிரியர் : வண்ணதாசன்பக்கங்கள் : 208வெளியீடு : சந்தியா பதிப்பகம்வாசிப்பு : Kindle 🎶சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நூல் 15 சிறுகதைகளை உள்ளடக்கியது. 🎶மொழி நடை சிறப்பாக இருந்தது. மூளைக்குள் காட்சிகள் படம் போல ஓடின. வட்டாரச் சொல்லாடல்கள் சொந்த ஊரை நினைவுபடுத்தின. எனது கிராமத்தில் இருந்தது போன்ற ஒர் உணர்வு. 🎶ஒரு தாமரைப் பூ ஒரு குளம், ஒரு பறவையின் வாழ்வு, ஒரு சிறு இசை ஆகிய சிறுகதைகள்…

  • காணி நிலம் | காலாண்டு இதழ் | விமர்சனம்

    காணி நிலம் | காலாண்டு இதழ் | விமர்சனம்

    சிறுகதை, மொழிபெயர்ப்புச் சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதை என வகைமைப்படுத்தப்பட்டுள்ள இவ்விதழ் நாற்பத்தி நான்கு பக்கங்களைக் கொண்டுள்ளது. எழுத்தாளர் நகுலன் அவர்களைப் பற்றிய அறிமுகத்துடன் இதழ் தொடங்கியது. நகுலன் அவர்களின் ஒரு ராத்தல் இறைச்சி என்ற சிறுகதையும், நாறும்பூநாதன் அவர்களின் மூச்சுக்காற்று என்ற சிறுகதையும் என்னைக் கவர்ந்த படைப்புகள். இரா.செல்வமணி அவர்களின் நான் யார்? என்ற கவிதையும், சிவனேசன் அவர்களின் காப்பாற்றுதல் கவிதையும் என் உணர்வுகளோடு பொருந்தி போயின. என்னால் புரிந்து கொள்ள இயலாத, என்…

  • மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம்

    மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம்

    நூல் : மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் ஆசிரியர் : சுந்தர ராமசாமி பக்கம் : 176 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் மன அழுத்தத்தில் உள்ளவர்களும்,  எப்போதும் அதிகப்படியாய் யோசித்தபடியே இருப்பவர்களும் சுந்தர ராமசாமி அவர்களின் புத்தகங்களை எளிதாய் உணர்ந்து விட முடியும். அவரது புத்தகங்களை அஃறிணை நண்பனாய் மாற்றிக்கொள்ள முடியும். சின்ன சின்ன உணர்வுகளைக் கூட அவரால்  எழுத்தில் வார்த்து விட முடிகிறது. எளிதில் பகிர்ந்து கொள்ளாத அல்லது மற்றவர்களிடமிருந்து மறைக்க நினைக்கும் உணர்வுகள் அதில்…

  • தீட்டு | அழகிய பெரியவன் | புத்தக விமர்சனம்

    தீட்டு | அழகிய பெரியவன் | புத்தக விமர்சனம்

    நூல் : தீட்டு ஆசிரியர் : அழகிய பெரியவன் பக்கம் : 127 பதிப்பகம் : தமிழினி பதிப்பகம் பாலாவின் படங்களைப் பார்ப்பது போல இருந்தது 13 சிறுகதைகளை உள்ளடக்கிய தீட்டு என்ற இத்தொகுப்பு. அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட, விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசுகிறது ஒவ்வொரு பக்கமும். சம உரிமை, சம தர்மங்களை விரும்பும் எவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.  சூழ்நிலையால் விபச்சாரத்திற்கு தள்ளப்படும் காமாட்சி, சாதி ஒழிப்பு/சமத்துவத்திற்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதிகள் இல்லாத…

Design a site like this with WordPress.com
Get started