Tag: கதை

  • காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காச்சர் கோச்சர் ஆசிரியர் : விவேக் ஷான்பாக்மொழிபெயர்ப்பு : கே. நல்லதம்பிபக்கங்கள் : 103 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஏன் இந்தப் புத்தகம் வாசிக்க வேண்டும்? 1) வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய வாழ்க்கை முறையில் சற்று நின்று கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தல் என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. ஆனால் இப்புத்தகம் உங்களைக் கடந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும். நல்லதோ கெட்டதோ இப்புத்தகத்தில் இல்லாத சில அனுபவங்களையும் சேர்த்து அசை போட வைக்கும்.2)…

  • ஓநாய் குலச்சின்னம் | ஜியோங் ரோங் | புத்தகம் – விமர்சனம்

    ஓநாய் குலச்சின்னம் | ஜியோங் ரோங் | புத்தகம் – விமர்சனம்

    நூல் : ஓநாய் குலச்சின்னம் ஆசிரியர் : ஜியோங் ரோங்மொழிபெயர்ப்பு : சி. மோகன் பக்கம் : 918 வாசிப்பு : Kindle 📍இயற்கையை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் எண்ணற்ற சிக்கலான முறையில் பிணைபட்டிருக்கும் இயற்கையின் கண்ணிகளில், ஒன்றை அறுத்து எறிந்தாலும் அது நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 📍உள் மங்கோலியாவில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் அங்குள்ள நாடோடி மக்களுடன் சேர்ந்து…

  • விருந்தாளி | ஆல்பெர் காம்யு | புத்தகம் – விமர்சனம்

    விருந்தாளி | ஆல்பெர் காம்யு | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : விருந்தாளி ஆசிரியர் : ஆல்பெர் காம்யு பக்கம் : 32 மொழிபெயர்ப்பு : க. நா. சு வாசிப்பு : Kindle கதையின் ஆசிரியர் யார், புத்தகம் எந்த நாட்டைப் பற்றியது, எழுதப்பட்ட காலம், சூழ்நிலை என எதுவும் தெரியாமல் ஒரு கதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் போலும்.  ஒரு காவலர், ஒரு ஆசிரியர், ஒரு கைதி என மூவரை மட்டுமே உள்ளடக்கிய சிறுகதை. படித்து முடித்த பின்பு ஒரு பக்கம்…

  • வார்டு எண் 6 | ஆன்டன் செக்காவ் | புத்தகம் – விமர்சனம்

    வார்டு எண் 6 | ஆன்டன் செக்காவ் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : வார்டு எண் 6 ஆசிரியர் : ஆன்டன் செக்காவ்மொழிபெயர்ப்பு : வானதிபக்கம் : 275 💭கறுப்புத் துறவி, மாடி வீடு, குடியானவர்கள், வார்டு எண் 6 என்ற நான்கு குறுநாவல்களின் தொகுப்பே இந்நூல். 💭தன்னை மேதை எனவும் வித்தியாசமானவன் எனவும் நினைக்கும் கோவரின். அறிவின் மூலமும் சிந்தனையின் மூலமும் மேன்மை நிலையை அடைய முயற்சிப்பவர். குடும்ப வாழ்க்கை அப்படிப்பட்ட ஒரு மனிதரை சாதாரண பாதையில் நடக்க கூட்டி வந்தால் நடக்கும் விபரீதங்கள் பற்றி இக்கதை…

  • மொட்டைமாடிக் குருவி

    மொட்டைமாடிக் குருவி

    ‘‘வெள்ளைத் திணை தான் அது சாப்பிடுமாம், ‘உற்சாகத்தில் அண்ணா கொஞ்சம் சத்தமாய்ப் பேசினான். கூகுளில் தேடிக் கண்டுபிடித்துச் சொன்னான் இதுதான் சிட்டுக் குருவிகளின் பிரதான உணவு என. ‘எவ்வளவு வெல பாரு? ரொம்ப அதிகமா? எங்க கெடைக்கும்? நாளைக்கே வாங்கிட்டு வந்துரு – கட்டளையிட்டபடி நான். அவ்வப்போது கடைகளில் வாங்கி வரும் மிக்சரைக் கொடுத்து காகங்களின் வம்சத்தைக் கெடுத்ததைப் போல சிட்டுக்குருவிகளின் வம்சத்தையும் கெடுக்க விரும்பவில்லை. இதுவே இத்தேடலுக்குக் காரணம். பிரதான சாலையில் உள்ள பெரிய கடைகளிலோ,…

  • உயரப் பறந்த இந்தியக் குருவி – சாலிம் அலி | ஆதி வள்ளியப்பன் | புத்தக விமர்சனம்

    உயரப் பறந்த இந்தியக் குருவி – சாலிம் அலி | ஆதி வள்ளியப்பன் | புத்தக விமர்சனம்

    நூல் : உயரப் பறந்த இந்தியக் குருவி – சாலிம் அலிஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்பக்கங்கள் : 30வெளியீடு : ஓங்கில் கூட்டம்வாசிப்பு : Kindle 🐦நம்மில் எவ்வளவு பேர் நாம் விரும்பும் துறை சார்ந்த தகவல்களைத் தேடித் தேடிச் சேகரிக்கிறோம்? ஆராய்கிறோம்? அப்படியானதொரு வாழ்வு எவ்வளவு சுவாரசியமானது? எவ்வளவு சாகசங்கள் நிறைந்தது? இந்தியப் பறவையியலாளர் சாலிம் அலி அப்படிப்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம் இந்நூலில் கிடைக்கும். இப்புத்தகம் குழந்தைகளுக்கானது. 🐦இதுவரை இல்லாத…

  • வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு | சாவி | புத்தக விமர்சனம்

    வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு | சாவி | புத்தக விமர்சனம்

    நூல் : வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்குஆசிரியர் : சாவிபக்கங்கள் : 111வாசிப்பு : Bynge Ohayo gozaimasu…நகைச்சுவையான புத்தகம் வாசிக்க விருப்பப்பட்டு, வாஷிங்டனில் திருமணம் என்ற புத்தகத்தைப் படிக்கத்தான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஜப்பான் என்று இருந்ததால் இப்புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஜப்பானில் திருவள்ளுவருக்கு தேரோட்டம் நடைபெறுவதாக கதை இருக்கும். பொழுதுபோக்கிற்காக புத்தகம் படிக்க விரும்புபவர்களும், ஜப்பானை நேசிப்பவர்களும் இப்புத்தகத்தை வாசிக்கலாம்.Arigato gozaimasu…

  • அபிதா | லா.ச.ரா | புத்தக விமர்சனம்

    அபிதா | லா.ச.ரா | புத்தக விமர்சனம்

    நூல் : அபிதாஆசிரியர் : லா.ச.ராபக்கங்கள் : 112வாசிப்பு : Bynge லா.ச.ரா அவர்களின் வேறு புத்தகங்களைப் படிக்காமல் அபிதாவை ஏன் வாசித்தேன் என்ற உணர்வுதான் மேலோங்கி உள்ளது. கதாநாயகன் அம்பி வயதான காலத்தில் மனைவியுடன் தன் சொந்த ஊருக்கு வருகிறான். தன் பழைய காதலி இறந்து போன விஷயம் தெரிய வருகிறது. காதலியைப் போலவே தோற்றம் உள்ள அவள் மகள் மீது காதல் கொள்கிறான். அம்பியின் மனநிலை என்ன என்று கூறிக்கொண்டே கதை நகரும். இதென்ன…

  • பேருந்து நிலையம்

    பேருந்து நிலையம்

    வேடிக்கை பார்த்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கு அன்று ஏற்பட்டுவிட்டது. மதியம் கணினி வகுப்பை முடித்துவிட்டு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று இருப்பேன். வெகுநேரமாய் என் ஊருக்கான பேருந்து வரவேயில்லை. காலத்தைக் கொள்வதற்கு விழிகளுக்குக் கடிவாளமிடாமல் கருவிழியைக்  கால்பந்து போல சுழலவிட்டேன். போகிறவர்களையும் வருகிறவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். “வெள்ளரிக்காய்… வெள்ளரிக்காய்…”, கூவிக்கொண்டிருந்தார் ஒருவர். நாற்பது வயது இருக்கும். சற்றே மெலிந்த தேகத்திற்குச் சொந்தக்காரர். ஆனால் அவர்…

Design a site like this with WordPress.com
Get started