Tag: அன்பு

  • மொட்டைமாடிக் குருவி

    மொட்டைமாடிக் குருவி

    ‘‘வெள்ளைத் திணை தான் அது சாப்பிடுமாம், ‘உற்சாகத்தில் அண்ணா கொஞ்சம் சத்தமாய்ப் பேசினான். கூகுளில் தேடிக் கண்டுபிடித்துச் சொன்னான் இதுதான் சிட்டுக் குருவிகளின் பிரதான உணவு என. ‘எவ்வளவு வெல பாரு? ரொம்ப அதிகமா? எங்க கெடைக்கும்? நாளைக்கே வாங்கிட்டு வந்துரு – கட்டளையிட்டபடி நான். அவ்வப்போது கடைகளில் வாங்கி வரும் மிக்சரைக் கொடுத்து காகங்களின் வம்சத்தைக் கெடுத்ததைப் போல சிட்டுக்குருவிகளின் வம்சத்தையும் கெடுக்க விரும்பவில்லை. இதுவே இத்தேடலுக்குக் காரணம். பிரதான சாலையில் உள்ள பெரிய கடைகளிலோ,…

  • நாற்காலி | கி. ராஜநாராயணன் | புத்தகம் – விமர்சனம்

    நாற்காலி | கி. ராஜநாராயணன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : நாற்காலி (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் : கி. ராஜநாராயணன் பக்கங்கள் : 315வாசிப்பு : Kindle 💫கி.ரா அவர்களின் 40 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எளிமையான நடை. பெரும்பாலும் திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. படிக்கையில் நிச்சயம் நிறைய தடவை குறுநகை செய்யவேண்டியிருக்கும். நகைச்சுவைக்காக தனியாக மெனக்கெட்டு எழுதப்பட்ட வரிகள் போல் அல்லாமல் கதையோடு கதையாக வரும் வார்த்தைகள் புன்சிரிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலான கதைகள் கிராமத்தை மையமிட்டே உள்ளன. ஐந்தாறு கதைகள்…

  • ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள் | ஆன்டன் செக்காவ் | புத்தக விமர்சனம்

    ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள் | ஆன்டன் செக்காவ் | புத்தக விமர்சனம்

    நூல் : ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்ஆசிரியர் : ஆன்டன் செக்காவ் மொழிபெயர்ப்பாளர் : சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்பக்கம் : 146வெளியீடு : தடாகம்வாசிப்பு : Kindle 💫பொதுவாக புதினங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் போல சிறுகதைகள் எனக்குள் அவ்வளவு சீக்கிரம் நுழைந்து விடுவதில்லை. சில சிறுகதைகள் புரியாமலோ, பிடிக்காமலோ, பொருத்திப் பார்க்க முடியாமலோ போய் விடுகின்றன. சில சிறுகதைகள், சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த நபரைப் போன்றவை. அவற்றைப் பற்றி யோசிக்க எதுவுமே இருப்பதில்லை.…

  • வெண்ணிற இரவுகள் | ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி | புத்தக விமர்சனம்

    வெண்ணிற இரவுகள் | ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி | புத்தக விமர்சனம்

    நூல் : வெண்ணிற இரவுகள்ஆசிரியர் : ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கிபக்கங்கள் : 117மொழிபெயர்ப்பாளர் : ரா.கிருஷ்ணையாவாசிப்பு : Kindle ❤முக்கோணக் காதல். நான்கு இரவுகளில் கதை நடைபெறுவதாய் புத்தகம் அமைந்திருக்கும். உணர்வுகளை முதன்மைப்படுத்தி எழுதியுள்ள விதம் கதையோடு ஒன்றிப் போகச் செய்கிறது. ❤ஒன்றிரண்டு இடங்கள் தவிர்த்து மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது.கதாநாயகியின் வயது 16 என இருக்கும். அது மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. அதனை மட்டும் தவிர்த்துவிட்டு வாசிக்கையில் புத்தகம் அதன் போக்கில் நம்மை இழுத்துச் செல்லும். ❤அன்பு,…

  • ஒரு சிறு இசை | வண்ணதாசன் | புத்தக விமர்சனம்

    ஒரு சிறு இசை | வண்ணதாசன் | புத்தக விமர்சனம்

    நூல் : ஒரு சிறு இசைஆசிரியர் : வண்ணதாசன்பக்கங்கள் : 208வெளியீடு : சந்தியா பதிப்பகம்வாசிப்பு : Kindle 🎶சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நூல் 15 சிறுகதைகளை உள்ளடக்கியது. 🎶மொழி நடை சிறப்பாக இருந்தது. மூளைக்குள் காட்சிகள் படம் போல ஓடின. வட்டாரச் சொல்லாடல்கள் சொந்த ஊரை நினைவுபடுத்தின. எனது கிராமத்தில் இருந்தது போன்ற ஒர் உணர்வு. 🎶ஒரு தாமரைப் பூ ஒரு குளம், ஒரு பறவையின் வாழ்வு, ஒரு சிறு இசை ஆகிய சிறுகதைகள்…

  • இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    சொற்பமான வார்த்தைகளைக் கொண்டே இதயத்தில் தைக்கும் கவிதைகளை/வரிகளை சிலர் எழுதி விடுகிறார்கள். அப்படியான சில எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) ஒரு நாளிதழில் பிரமிள் அவர்களது கவிதையை வாசித்தேன். படித்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. இன்றுவரை இக்கவிதையின் பொருள் பற்றி யோசித்தது கிடையாது. கண்முன்னே இக்கவிதை ஏற்படுத்தும் காட்சி மட்டுமே போதுமானது எனத் தோன்றுகிறது. எப்போது படித்தாலும் வியப்பை ஏற்படுத்தும் இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 2) பூபாலன் அவர்களது இக்கவிதையை வாசிக்கும் போதெல்லாம்…

  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் | ஜெயகாந்தன் | புத்தக விமர்சனம்

    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் | ஜெயகாந்தன் | புத்தக விமர்சனம்

    நூல் : ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்ஆசிரியர் : ஜெயகாந்தன்பக்கம் : 423வெளியீடு : புத்தக டிஜிட்டல் மீடியா இது நான் படிக்கும் ஜெயகாந்தன் அவர்களின் இரண்டாவது புதினம். முதல் புதினம் – சில நேரங்களில் சில மனிதர்கள் – வாசித்து முடித்த பின்பு ஒரு வாரகாலம் அடுத்த புத்தகத்தை வாசிக்க இயலவில்லை. பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. (அதைப் பற்றி பிறகு நிச்சயம் பகிர்கிறேன்) மனித மனங்களை ஜெயகாந்தன் அவர்களால் எப்படிப் படம்பிடித்துக் காட்ட…

Design a site like this with WordPress.com
Get started